சட்ட விரோதமான சுரங்க பணி செய்து மாவட்ட வருவாய் அதிகாரியால் கையும் களவுமாக பிடிக்கப் பட்டும் இதர மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது சட்ட விரோத கையிருப்பை கண்டுபிடித்த இனத்திலும் இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்தின் மீது சுமார் 15 வருடங்கள் கடந்தும் நடவடிக்கை இல்லை. இந்த இரண்டு கோப்புகளும் இந்தியன் ரேர் எர்த் நிறுவன அதிகாரிகளால் திருடப்பட்டு விட்டது என கூறப்படுகிறது. இது பற்றி மத்திய புலனாய்வு துறை விசாரணை நடத்த வேண்டாமா?